Diwali tragedy பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு
ராணிப்பேட்டையில் சோகம் பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதி திராவிட குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் ரமேஷ்(28) இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி அஸ்வினி(25) இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில் 4 வயதில் நவிஷ்கா (4)என்ற பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது இந்நிலையில் நேற்று இரவு தீபாவளி கொண்ட்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராதவிதமாக சிறுமி நவிஷ்கா, அதன் அருகே சென்றுவிட்டார்.

இதில் பட்டாசு வெடித்ததில் சிறுமி அலறி துடித்தத்தார் சிறுமியின் மார்பு மற்றும் கைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது இதனை அடுத்து உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகாமையில் உள்ள செய்யார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர் இதை அறிந்து சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்பவர்களின் நெஞ்சை கரையச் செய்தது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.