erode to sengottai train timings ஈரோட்டில் இருந்து செங்கோட்டை வரை முன்பதிவு இல்லாத ரயில் சேவை முழு விவரம்
erode to sengottai train timings ரயில்பயணிகளின் கனிவான கவனத்திற்கு, ஈரோடு நகரில் இருந்து கிளம்பி திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வரும் முன்பதிவு இல்லாத ரயில், செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இன்று ஜனவரி 24 முதல் ஈரோட்டில் இருந்த புறப்படும் திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 2 மணியளவில் ஈரோடு ரயில் நிலையத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளம் ஆகிய துறைகளின் இணை அமைச்சர் முனைவர் எல். முருகன் இந்த ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்.
அதன்படி ஈரோடு – செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் (16845) தினந்தோறும் ஈரோட்டில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு, இரவு 08.50 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். பின்பு திருநெல்வேலியில் இருந்து இரவு 08.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் செங்கோட்டை – ஈரோடு முன்பதிவு இல்லாத ரயில் (16846) செங்கோட்டையிலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு காலை 06.25 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.பின்பு திருநெல்வேலியில் இருந்து காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மாலை 03.00 மணிக்கு ஈரோடு சென்று சேரும்.