Final voter list released 2024 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு முழு விவரம்
Final voter list released தமிழ்நாட்டில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ‘சிறப்பு சுருக்கமுறை திருத்தம்’ எனப்படும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும்.
Final voter list released
இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் 2023 அக்டோபர் 17-ம் தேதி தொடங்கியது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், 3 கோடியே 68 ஆயிரத்து 610 ஆண்கள், 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பெண்கள், 8,016 மூன்றாம் பாலினத்தவர் என 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்கள் நேரிலும் ஆன்லைலன் மூலமும் வாக்காளர் முகாமிலும் பெறப்பட்டது. இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது தற்போது மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளர் அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் அந்தந்த ஆட்சியர்களும், சென்னை மாநகராட்சியில் ஆணையரும் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள் அதே போல் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என சரிபார்க்கலாம்
ஆகிய இணையதள முகவரி,வாக்காளர் உதவி கைபேசி செயலிஆகியவற்றின் மூலம் ஆன்லைனிலும் சரிபார்த்து கொள்ளலாம்
ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி
முதலில் கீழே உள்ள Link click செய்யுங்கள் அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிட்டு சர்ச் செய்யுங்கள் உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும்
அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அர்த்தம் மீண்டும் புதிய வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
https://electoralsearch.eci.gov.in/ கிளிக் செய்யவும்
உங்கள் மொபைல் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று பார்ப்பது எப்படி