TamilNadu NewsIMPORTANT NEWS

free kashi yatra scheme tamilnadu காசி இலவச பயணம் தமிழக அரசின் திட்டத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

tn govt kashi yatra scheme காசி இலவச பயணத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு பக்தா்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படவுள்ளனா். தமிழ்நாடு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படும் இந்தப் பயணத் திட்டத்துக்கு பக்தா்கள் வருகிற நவம்பர் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசி ஆன்மிகப் பயணம்.
காசி ஆன்மிகப் பயணம்.

காசி ஆன்மிகப் பயணம் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்

2023-2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு எண்.72-ல் அறிவித்துள்ளபடி. இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி, அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடமிருந்து மண்டலத்திற்கு 15 நபர்கள் வீதம் 300 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவங்களை தமது விலாசம் அமைந்துள்ள இத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023-க்குள் அனுப்ப வேண்டும்.

வேறு மண்டல இணை ஆணையர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.

காசி இலவச பயணத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்
காசி இலவச பயணத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்

 

நிபந்தனைகள்:-

1) விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

2) தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே மண்டல இணை ஆணையர்களால் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

3) இதர நிபந்தனைகள் இத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களிலும், www.hrce.tn.gov.in என்ற இத்துறை இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்

2023-2024 காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள்

1) காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும். இறை நம்பிக்கை உடையவராகவும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்

.2) விண்ணப்பதாரர்கள் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்று இணைக்கப்பட வேண்டும்.

3) விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-ற்கு மிகாமல் இருக்க வேண்டும். வட்டாட்சியரிடமிருந்து வருமானச் சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும்

4) காசி ஆண்மிகப் பயணம் (10 நாட்கள்) சென்று வரும் அளவிற்கு விண்ணப்பதாரர்களுக்கு போதிய உடல் தகுதி உள்ளதற்கான அரசு மருத்துவரின் (Government Civil Surgeon) சான்று கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்

5) விண்ணப்பதாரர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்க வேண்டும். 

free kashi yatra scheme tamilnadu
free kashi yatra scheme tamilnadu

6) விண்ணப்பதாரர்களின் Aadhaar Card ஆதார் அட்டை நகல் (அல்லது) PAN Card நிரந்தர கணக்கு எண் அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்

7) இந்து சமய அறநிலையத் துறையின் ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திற்கும், தலா 15 விண்ணப்பதாரர்கள் விதம், 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து 300 விண்ணப்பதாரர்கள் மட்டும் அந்தந்த மண்டல இணை ஆணையர்களின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்படுவர்.

8) ஆன்மிக பயணத்திற்கான விண்ணப்பங்களை தங்களது இருப்பிடம் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் நீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலத்திற்கு 20.11.2023-க்குள் அணுப்ப வேண்டும். வேறு மண்டல இணை ஆணையர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

9) விண்ணப்பதாரரின் கணவரோ மனைவியோ (spouse) விண்ணப்பித்திருந்தால், அதன் விபரத்தினை தமது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

10) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பத்து நாட்கள் பயணத்திற்கு தேவையான அத்யாவசிய மருந்துகள்/பொருட்களை தங்களுடன் எடுத்துவர வேண்டும்.

11) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தங்களுடன் சிறு குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை.

12)தேர்வு செய்யப்படும் 300 விண்ணப்பதார்களையும், ஒரே பயணமாக அல்லாமல், 2 அல்லது 3 பயணங்களாக பிரித்து அழைத்துச் செல்ல நேரிடும் போது, ஒவ்வொரு பயணத்திற்கும் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர்.

13)ஆன்மிகப் பயணத்தின் போது மிக விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து வருதல் கூடாது.

tn govt kashi yatra scheme
tn govt kashi yatra scheme

14)ஆண்மிக பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பயண தேதிக்கு முந்தைய நாளே தமது சொந்த செலவில் இராமேசுவரம் வந்து அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் தமது வருகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறே இராமேசுவரத்தில் ஆன்மிக பயணம் நிறைவு செய்த பின்னர் தமது சொந்த செலவில் அவரவர் இருப்பிடம் திரும்ப வேண்டும்.

15) இராமேசுவரத்தில் துவங்கும் இந்த ஆன்மிகப் பயணம் காசி தரிசனம் முடித்து மீண்டும் இராமேசுவரம் வந்து அருள்மிகு இராமநாதசுவாமியை தரிசித்த பின்னரே நிறைவு பெறும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

16)விண்ணப்பதாரர் தனது ஆயுட் காலத்தில் ஒரு முறை மட்டுமே மானியம் பெற தகுதியானவர் என்பதால் இதற்கு முன் அரசு செலவில் காசி ஆன்மிகப் பயணம் மேற்கொண்டவர்கள் மீள விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்

மேலும் விவரங்களுக்கு:-

https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/149/document_1.pdf

Related Articles

Back to top button