garudan movie review சூரி கதாநாயகனாக நடித்துள்ள கருடன் திரை விமர்சனம்
garudan movie review தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்த சூரி, வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் வாயிலாக ஹீரோவாக அறிமுகம் ஆனார் சூரி இரண்டாவது முறையாக ஹீரோவாக நடித்துள்ள ‘கருடன்’ படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
தனுஷின் கொடி, பட்டாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தற்போது சூரி நடிப்பில் ‘கருடன்’ படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர்கள்:-
சூரி
சசிகுமார்,
உன்னி முகுந்தன்
ஷிவதா பிரிகிடா
சமுத்திரக்கனி
ரேவதி ஷர்மா
ரோஷினி ஹரிப்பிரியன்
வடிவுக்கரசி.
மைம் கோபி,
ஆர்.வி.உதயகுமார்
இசை
யுவன் சங்கர் ராஜா
கதை:-
தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி (ஆர்.வி.உதயகுமார்). இதற்கான பட்டா கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதனை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதில் அமைச்சர் முனைப்புக் காட்ட, அதனை பராமரித்து வருகிறது செல்லாயி (வடிவுக்கரசி) குடும்பம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆதி (சசிகுமார்), கர்ணா (உன்னி முகுந்தன்). இணை பிரியாத் தோழர்கள்.

சொக்கன் (சூரி )தனக்கு சோறு போட்டு வளர்த்த நண்பன் கர்ணா(உன்னி முகுந்தன்) உடன் இருக்க, அவருக்கு ஒன்று என்றால் உயிரையே கொடுக்கும் அளவிற்கு இருக்கிறார்.இவர்களைத் தாண்டிதான் நிலத்தின் பட்டாவை எடுக்க வேண்டும். அதற்காக ஆதி – கர்ணா நட்பில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கும் அமைச்சர் அதில் வெற்றி கண்டாரா, இல்லையா? நியாயமா, விசுவாசமா என வரும்போது சொக்கன் எந்தப் பக்கம் நின்றார் என்பது படத்தின் திரைக்கதை. இதனால் கர்ணாவிற்கு ஆசை காட்டி, ஆதியை கொல்லும் நிலைக்கு வர, இந்த உண்மையெல்லாம் தெரிந்த சொக்கன் யார் பக்கம் நின்றார், விஸ்வாசமா, நேர்மையா என்ற சொன்னனின் போராட்டமே மீதிக்கதை.
garudan movie review
CLICK HERE