girl died eating noodles ordered in amazon அமேசானில் சைனீஸ் நூடுல்ஸ் ஆடர் செய்து சமைத்து சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழப்பு

அமேசானில் சைனீஸ் நூடுல்ஸ் ஆடர் செய்து சமைத்து சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ் இவர் பொன்மலை ரயில்வேயில் பணியாற்றி வருகிரார் இவரது மகள் ஸ்டெபி ஜாக்குலின் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

ஸ்டெபிக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும் என்பதால் .( செப்,1 )நேற்று நூடுல்ஸ் சாப்பிட ஆசைப்பட்டு, அமேசானில் ஆர்டர் செய்து வாங்கி வைத்திருந்த சைனீஸ் புல்டாக் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டுவிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். ஆனால் காலையில் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால், அவரது பெற்றோர் எழுப்ப முயன்ற போது அவர் கண் விழிக்காததால் அருகில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்து சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரியவந்தது.
இந்நிலையில் சிறுமி இறப்பில் சந்தேகம் உள்ளது என அரியமங்கலம் போலீசார் தகவல் அறிந்து விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் சிறுமி இறந்ததற்கு காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்ட நூடுல்ஸால்தான் சிறுமி உயிரிழந்ததாக தகவல்கள் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.