TamilNadu News

good bad ugly review in tamil நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி விமர்சனம்

good bad ugly review in tamil நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி விமர்சனம்

நடிகர்கள்:- அஜித், திரிஷா, அர்ஜுன் தாஸ், சிம்ரன்,பிரபு, யோகி பாபு, சுனில், பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, ஜாக்கி ஷராப், கதை:- மும்பையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கும் அஜித்குமார், ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்கின்றார் திருமணத்துக்கு பிறகும் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாமல் டான் ஆக சுற்றுகிறார்.

good bad ugly review in tamil
good bad ugly review in tamil

திரிஷாவுடன் திருமணத்திற்க்கு பிறகும் தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் கேங்ஸ்டராக இருக்கின்றார் இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார் திரிஷா. மகனை பார்க்க வேண்டும் என்றால் அனைத்தையும் விட்டுவிட்டு திருந்தி வாழ சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் மனைவி திரிஷா கேட்டுக்கொள்ள பிறந்த தனது குழந்தை மீது சத்தியம் செய்து எல்லாவற்றையும் விட்டு போலிஸிடம் சரண்டர் ஆகி, திருந்தி 17 வருடம் சிறை செல்கின்றார். அப்பா சிறையில் இருக்கிறார் என தெரியாமல் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளுக்கு அப்பா வருவார் என எதிர்பார்த்து இருக்கும் அஜித் மகனுக்கு 18வது பிறந்தநாள் வருகிறது.

good bad ugly review
good bad ugly review

17 வருடங்களுக்கு பிறகு ஸ்பெயினில் வசிக்கும் மனைவியையும், மகனையும் பார்ப்பதற்காக வருகின்றார் அஜித் குமார், தனது மகன் போதை வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்வது கண்டு அதிர்ச்சி அடைகின்றார்.

அவரை வழக்கில் சிக்க வைத்தது யார்?

அதன் பின்னணி என்ன?

ஜெயிலில் இருந்து மகனை அஜித் காப்பாற்றினாரா?

மீண்டும் கேங்ஸ்டர் பாதைக்கு திரும்பினாரா?

என்பதே படத்தின் மீதி கதை. 

good bad ugly review in tamil

Trailer Click Here

Related Articles

Back to top button