TamilNadu News
Guinness world record 100kg வெண்ணெயில் 20 அடி உயர அனுமன் சிலை செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த நபர்

100kg வெண்ணெயில் 20 அடி உயர அனுமன் சிலை செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த நபர்
சென்னை T. நகரில் சேர்ந்த இஞ்சினியரான கௌதம் என்பவர் 100 கிலோ வெண்ணெயில் உருவாக்கிய 20 அடி உயர அனுமன் சிலை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

சென்னை T. நகரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி பக்த பத்ராசல சாமர் நிகழ்வு நடைபெற்றது. அதில் பாத சேவா அறக்கட்டளை சார்பில் இஞ்சினியர் கௌதம் என்பவர் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 100 கிலோ வெண்ணெய்யைக் கொண்டு 20 அடி உயர அனுமார் சிலையை உருவாக்கினார்
இஞ்சினியரான கௌதம் சுவாமி அலங்காரம் செய்யும் கலையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் அவர் உருவாக்கிய 100கிலோ வெண்ணெயிலான 20 அடி உயர அனுமன் சிலை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.