heavy rain school holiday கனமழை நாளை 18 ம் தேதி பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு
நாளை பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

heavy rain school holiday கனமழை நாளை 18 ம் தேதி பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு school leave
வங்கக் கடலின் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

இதனால் நாளை 18.12.2023: தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
எனவே கன மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.