how to buy ipl tickets online ஐபிஎல் CSK vs RCB போட்டியின் டிக்கெட் விற்பனை 18ம் தேதி தொடக்கம்!
how to buy ipl tickets online ஐபிஎல் முதல் போட்டியின் டிக்கெட் விற்பனை 18ம் தேதி தொடக்கம்!
ஜ.பி.எஸ் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 18ம் தேதி காலை 9.30 மணி முதல் PayTM மற்றும் http://insider.in மூலம் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், 22ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 18ம் தேதி (நாளை மறுநாள் ) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
KMK கலைஞர் மு. கருணாநிதி அரங்கு அமர்ந்து போட்டியை பார்க்க 7500 ரூபாய் வசூலிக்கப்படும்
C/D/E Lower ஸ்டாண்டில் அமர்ந்து பார்க்க 1,700 ரூபாயும்,
C/D/E Upper ஸ்டாண்டில் போட்டியை அமர்ந்து பார்க்க 4000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், I/J/K Lower ஸ்டாண்ட் 4500 ரூபாயும்,
I/J/K Upper ஸ்டாண்ட் 4000 ரூபாயும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது