TamilNadu News

ilaiyaraaja concert chennai 2024 இளையராஜாவின் இன்னிசை கச்சேரிக்கு சென்று வர இலவச மெட்ரோ பயணம் முழு விவரம்

ilaiyaraaja concert chennai 2024 இளையராஜாவின் இன்னிசை கச்சேரிக்கு சென்று வர இலவச மெட்ரோ பயணம் முழு விவரம்

சென்னையில் நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை கச்சேரிக்கு வருபவர்களுக்கு கட்டணமில்லா மெட்ரோ பயணம்

ilaiyaraaja concert chennai 2024
ilaiyaraaja concert chennai 2024

PAYTM Insider மூலம் டிக்கெட் விலை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் பிரத்தியேக மெட்ரோ பாஸ்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

இளையராஜா 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

மியூசிக் மெட்ரோ மேஜிக்:

இளையராஜாவின் இன்னிசை” கச்சேரிக்கு வருபவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம்​சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில், நாளை 14.07.2024 “இளையராஜாவின் – இன்னிசை கச்சேரி” நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மார்க் மெட்ரோ உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

இசை ஆர்வலர்களுக்கான சிறப்புச் சலுகையாக, கச்சேரி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு (Paytm Insider மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும்) பிரத்யேக மெட்ரோ பாஸ்கள் (unique QR code) கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும், இது அவர்கள் அருகில் உள்ள மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குச் சென்று நிகழ்ச்சியை கண்டுகளித்து மெட்ரோ வழியாக அவர்கள் இடத்திற்கு திரும்புவதற்கு உதவும். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்திற்குப் பயன்படுத்தலாம் (2 நுழைவு & 2 வெளியேறு).

மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மெட்ரோ பாஸ்களை ஸ்கேன் செய்யலாம்.

இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று, தடையில்லா பயணத்தை அனுபவிக்கும்படி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.​

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இதுபோன்ற ஒத்துழைப்பை வழங்க சென்னையில் உள்ள மற்ற பெரிய நிகழ்வு அமைப்பாளர்களையும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அழைக்கிறது.

ilaiyaraaja concert chennai 2024

மெட்ரோ ரயில் அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/cmrlofficial/status/1812056032232763637

Related Articles

Back to top button