Illegal Electric Fence சட்டவிரோத மின் வேலி அமைத்தால் 3 ஆண்டுகள் சிறை மின் வாரியம் எச்சரிக்கை
Illegal Electric Fence மின் வேலி அமைத்தால் 3 ஆண்டுகள் சிறை
சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசின் மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விளைநிலங்களில் பயிரிட்டு உள்ள பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும், வீடு மற்றும் இதர விவசாய மின் இணைப்புகளில் இருந்து மின் வேலி அமைப்பது இந்திய மின்சார சட்டத்தின்படி குற்றமாகும்.
இதற்கு குற்றவியல் தண்டனை வழங்கப்படும். மின் வேலி அமைப்பது தெரியவந்தால் பொதுமக்கள் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்நிலையில் சட்டவிரோதமாக மின் வேலி அமைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய மின்சாரச் சட்டத்தில் நேரடி மின் வேலிகள் அமைப்பதற்கு எதிராக கடுமையான விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மற்றும் அத்தகைய வேலிகளை அமைப்பவர்கள் சட்டத்தின் 138 வது பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உட்பட கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என மின் வாரியம் எச்சரித்துள்ளது