IMPS transaction increased to ₹5 lakh Gpay, Phonepe, Paytm மூலம் இனி ரூ.5 லட்சம் வரை பணப் பரிமாற்றம் செய்யலாம்!
ஐஎம்பிஎஸ் மூலம் ரூ.5 லட்சம் வரை பணம் அனுப்பலாம்
Gpay, Phonepe, Paytm மூலம் இனி ரூ.5 லட்சம் வரை பணப் பரிமாற்றம் செய்யலாம்!

Gpay, Phonepe, Paytm உள்ளிட்ட UPI செயலிகள் வாயிலான பண பரிவர்த்தனை உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.இந்த முறையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் வரையிலான பண பரிவர்த்தனை மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இந்த வரம்பை தற்போது ரிசர்வ் வங்கி உயர்த்தி அறிவித்துள்ளது.
அதாவது இனி நாள் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்களும் வணிகர்களும் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMPS என்பது நிகழ்நேர கட்டணச் சேவையாகும், இது 24 மணி நேரமும் கிடைக்கும். இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் RBI-அங்கீகரிக்கப்பட்ட ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் வழங்குநர்கள் (PPI) மூலம் உடனடியாகப் பணப் பரிமாற்றம் செய்ய வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்தச் சேவையை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) வழங்குகிறது.