indonesia gold mine தங்க சுரங்கத்தில் மண் சரிவு12 பேர் பலி 18 பேர் மாயம்!
indonesia gold mine இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில், சட்டவிரோதமாக தங்கம் சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. சுரங்கத்தில் உள்ள சிறு குழிகளில், 30-க்கும் மேற்பட்டோர் இறங்கி தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 18 பேர் மாயமாகி உள்ளனர்.உடனடியாக தகவல் அறிந்து வந்த ராணுவம், காவல் துறை, மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் ஏராளமான சட்ட விரோத தங்க சுரங்கங்கள் இயங்கி வரும் நிலையில், அங்குள்ள சுலவேசி தீவில் கோரோண்டாலோ பகுதியில் இயங்கி வந்த சட்ட விரோத தங்க மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இடைவிடாது பெய்த மழையால் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன்போது, சுரங்கத்தில் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இந்த திடீர் மண்சரிவில் சிக்கினர்.தற்போது வரை 12 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 18 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.