International Pride World Record 100 பாடல்கள் 100 நிமிடங்க நடிகர் பிரபுதேவா முன் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை

100 பாடல்கள் 100 நிமிடங்க நடிகர் பிரபுதேவா முன் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியில் திறந்தவெளி அரங்கத்தில் நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி என்ற நடன நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில், சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி பல வெளி மாநிலத்தில் இருந்தும் சுமார் 1800க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரபுதேவா, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரபுதேவா நடனத்தில் உருவான 100 பாடல்கள் தொடர்ந்து 100 நிமிடங்களுக்கு ஒவ்வொரு குழுவினராக மேடைக்கு முன் வந்து நடனமாடி தங்களது நடன திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். .நடன கலைஞர்கள் ஆடுவதை மேடையில் நின்றபடியே பிரபுதேவா கண்டு ரசித்த படி கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.
100 நிமிடங்கள் 100 பாடல்களுக்கு நடனமாடி International Pride World Record சாதனை நிகழ்த்தினர். இந்த உலக சாதனையை நிகழ்த்தியதற்கான சான்றிதழை பிரபுதேவா வழங்கினார்.
இந்த நடன நிகழ்ச்சியை பிரபுதேவாவுடன் நடன இயக்குனர் ராபர்ட், நடிகர் ரோபோ சங்கர், நடிகை இந்திரஜா சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.