irctc spl train madurai to palani 2024 தெற்கு ரயில்வே அறிவித்துள்ள சிறப்பு ரயில்
தைப்பூச திருவிழாவையொட்டி மதுரை to பழநி சிறப்பு ரயில்கள்

irctc spl train madurai to palani 2024 உலகம் முழுவதும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் அனைத்து முருகன் ஆலயத்தில் குறிப்பாக அறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருவிழா இம்மாதம் 25ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான 3ம் படை வீடு பழனி தண்டாயுதபாணி திருக்கோவில், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க குவிந்து வருகிறானர்.
மேலும் தமிழகம் முழுவதும் இருந்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பழனி முருகனை தரிசிக்க வருகை தரலாம் என்பதால் பக்தர்கள் வசதிக்காக மதுரை – பழநி இடையே ஜனவரி 24 மற்றும் 25 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
irctc spl train madurai to palani

மதுரை to பழநி தைப்பூச சிறப்பு ரயில் குறிப்பிட்ட இரு நாட்களுக்கு மதுரையிலிருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு காலை 08.30 மணி அளவில் பழனி சென்று சேரும் என்றும்
மறு மார்க்கத்தில் பழநி to மதுரை தைப்பூச சிறப்பு ரயில் பழநியில் இருந்து மாலை 05.45 மணிக்கு புறப்பட்டு இரவு 08.15 மணிக்கு மதுரை வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த சிறப்பு ரயில் சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரம் CLICK HERE