job for Physiotherapist ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரை சம்பளம் பிசியோதெரபிஸ்ட்களுக்கு வேலைவாய்ப்பு

ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரை சம்பளம் பிசியோதெரபிஸ்ட்களுக்கு வேலைவாய்ப்பு
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் (TNMRB or Tamil Nadu Medical Recruitment Board) பிசியோதெரபிஸ்ட்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாத சம்பளம் ரூ.36,200/- முதல் அதிகபட்சமாக ரூ.1,14,800/- வழங்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பணி :
பிசியோதெரபிஸ்ட் கிரேட் – II (Physiotherapist Grade – II)
மொத்த காலி பணியிடங்கள் :
47
கல்வி தகுதி :
பிசியோதெரபிஸ்ட் இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு :
32 வயதுக்குள் இருக்க வேண்டும்
(மாற்றுத்திறனாளிகள், எஸ்சி/எஸ்டி, மற்றும் முன்னாள் ராணுவப் படை வீரர்களுக்கு உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு)
மாத சம்பளம்:
ரூ.36,200/- முதல் அதிகபட்சமாக ரூ.1,14,800/- வரை வழங்கப்படும்.
தேர்வு முறை :
தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மற்றும் கம்ப்யூட்டர் அடிப்படையில் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .
தேர்வு மையங்கள் :
சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாள் :
7/11/2024
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்
வின்ணப்பிக்க: