job in Malaysia மாதம் 50,000 ஊதியத்தில் கட்டுமானப் பணியாளர், ஹெல்பர், வெல்டர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு

மாதம் 50,000 ஊதியத்தில் கட்டுமானப் பணியாளர், ஹெல்பர், வெல்டர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு
மலேசியாவில் கட்டுமானப் பணியாளர், ஹெல்பர், வெல்டர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் அதன் படி

பணி:
கட்டுமானப் பணியாளர், ஹெல்பர், வெல்டர்
கல்வி தகுதி:
10ஆம் வகுப்பு அல்லது அதற்கு கீழ்
வெல்டர் பணிக்கு தகுதிச் சான்று அவசியம்
மாத ஊதியம்:
கட்டுமானப் பணியாளருக்கு மாதம் ரூ.50,000/
கட்டுமான ஹெல்பர் வேலைக்கு மாதம் ரூ.28,000/
வெல்டர் வேலைக்குமாதம் ரூ.40,000/
உணவு, இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு, விசா ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
பணி அனுபவம் அல்லது பணி அனுபவம் இல்லாத 50 வயதுக்கு உட்பட்டோர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
சேவை கட்டணம்:
ரூ35,400/
இப்பணிகளுக்கு விருப்பமுள்ள ஆண்கள் இணையதளத்தில் பதிவு செய்ய
www.omcmanpower.tn.gov.in
மேலும் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சுய விவரம், விண்ணப்பப் படிவம், கல்வி,பணி அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகலுடன் அனுப்பி வைக்க வேண்டும்
விண்ணப்பகளை அனுப்ப கடைசி தேதி:
26/07/2024
மேலும் விவரங்களுக்கு:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள்:
044-22505886, 22502267 மற்றும்
வாட்ஸ்அப் எண்ணில் 9566239685 தொடர்பு கொள்ளலாம்.
இது ஓர் அரசு நிறுவனம். இந்த நிறுவனத்தின் கீழ் இடைத்தரகரோ ஏஜெண்டுகளோ இல்லை. எனவே, விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக இந்தநிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்.