jobs for office assistant 8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு
job office assistant ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு
jobs for office assistant தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் / இரவு காவலர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 03.01.2024 முதல் 11.01.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:-
அலுவலக உதவியாளர்
இரவு காவலர்
மாத சம்பளம்:-
மாதம் 15700 முதல் 50000 வரை சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு:-
01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தி அடையாமல் இருக்க வேண்டும்
அரசாணை நிலை எண்.91 மனிதவள மேலாண்மைத்(எஸ்) துறை நாள்.19.09.2021ன்படி (உச்ச வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது) பொது (OC) பிரிவினர் 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
அரசாணை நிலை எண்.91 மனிதவள மேலாண்மைத்(எஸ்) துறை நாள்.19.09.2021ன்படி (உச்ச வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது) BC / MBC / DC பிரிவினர் 18 வயது நிரம்பியவராகவும் 34 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
அரசாணை நிலை எண்.91 மனிதவள மேலாண்மைத்(எஸ்) துறை झा नं. 19.09.2021 288) வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது) SC / ST / SCA பிரிவினர் 18 வயது நிரம்பியவராகவும், 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:-
அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
இரவு காவலர் பணியிடத்திற்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
இப்பணியிடத்திற்கான விண்ணப்பிக்க https://dharmapuri.tn.nic.in மாதிரி படிவத்தினை என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
11.01.2024 அன்று மாலை 5.45 மணிக்குள்
நிபந்தனைகள்:
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nic.in @gm(National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும்.
2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 03.01.2024 11.01.2024 2 क ल कली का 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் பாலக்கோடு என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி, வயது, இனசுழற்சி) விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
4. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
5. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6. காலதாமதமாக வரும் விண்ணப்பங்ள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
7. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு
மேலும் விவரங்களுக்கு :-
https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2023/12/2023122954.pdf