TamilNadu News
kalaignar coin கலைஞர் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி!
kalaignar coin கலைஞர் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி!
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, கலைஞர் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர்’ டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் விண்ணப்பம் அளித்திருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இதற்கு முன், முன்னாள் முதல்வர்களான காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைவர்கள், பல்வேறு கலைஞர்கள் உள்ளிட்டோர் மீதான பல நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.