kalki 2898 ad review நடிகர் பிரபாஸ் நடிப்பில் கல்கி திரைப்படம் விமர்சனம்
kalki 2898 ad review நடிகர் பிரபாஸ் நடிப்பில் கல்கி திரைப்படம் விமர்சனம்
நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோன் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்துள்ள கல்கி திரைப்படத்திற்க்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்
கதை:-
மகாபாரதப் போரில் கவுரவர்கள் சார்பாக பாண்டவர்களை எதிர்த்து போரிடுகிறார் த்ரோணாச்சாரியார் மகன் அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன் ). பாண்டவர்களுக்கு பிறக்கவிருந்த குழந்தையை வயிற்றிலேயே பிரம்மாஸ்திரத்தை வைத்து கொல்கிறார். இதனால் கோவமடைந்த கிருஷ்ணன் அமிதாப் பச்சனுக்கு தண்டனையாக சாகாவரத்தை வழங்குகிறார். இதற்கு விமோச்சனமாக கலியுகத்தில் கிருஷ்ணன் மீண்டும் அவதாரம் எடுக்கும்போது அவரை காப்பாற்றினால் மட்டுமே இந்த சாபத்தில் இருந்து விடுபடமுடியும் என கூறுகின்றார்
அந்த போர் முடிந்து சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதாக கதை நகர்கிறது. 6000 வருடங்கள் ஓடி 800 வருடமாக உயிரோடு இருக்கும் யாஷ்கின்(கமல்) உலகின் கடைசி நகரமான காசியில் மக்களை அடிமை படுத்தி ஒரு ஊரை உருவாக்கி வைத்துள்ளார். அந்த ஊரில் ஒரு பவுண்டி ஹண்டராக பிரபாஸ் வர, ஒன் மில்லியன் யூனிட் இருந்தால் கமல் இருக்கும் காம்ப்ளஸ்குள் வரலாம் என்று ஒரு விதி, இதற்காக பிரபாஸும் போராட,
அதே நேரத்தில் கமல் பல பெண்களின் கருவில் இருந்து ஒரு சீரோம் எடுக்க முயற்சிக்கிறார். தீபிகா படுகோன் வயிற்றில் கமலை அழிக்கும் சக்தி படைத்த குழந்தையை தனது கருவில் சுமந்து வருகிறார் அதில் கமல் சீரோம் எடுக்கும் போது அது கடவுள் கிருஷ்ணன் தான் என்பது தெரிய வருகின்றது, எப்படியாவது இந்தக் குழந்தையை அழித்து பிராஜெக்ட் கே என்கிற தனது குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என்று துடிக்கிறார்
கமல் அதே குழந்தையைக் காப்பாற்றி தனது சாபத்தை விடுவிக்க பல ஆண்டுகளாக காத்திருக்கிறார் அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்). குழந்தையை காக்க போரடுகின்றார் எப்படியாவது பணத்தை சேர்த்து தானும் இந்த காம்பிளக்ஸில் பணக்கார வழக்கை வாழ வேண்டும் என்பதே நாயகன் பிரபாஸ் கனவு.இந்தக் குழந்தையை கண்டுபிடித்து அதன் வழியாக தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார் பிரபாஸ். இவர்களில் யாருடைய லட்சியம் நிறைவேறியது என்பதே மீதி கதை.
kalki 2898 ad review
டிரைலர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்