liquor door delivery தமிழ்நாட்டில் வீட்டிற்கே டோர் டெலிவரியில் மது என பரவிய தகவல் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
No plans for liquor door delivery
liquor door delivery தமிழ்நாட்டில் வீட்டிற்கே டோர் டெலிவரியில் மது என பரவிய தகவல் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் ஆன்லைனில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுவதை போல மதுபானங்களையும் விநியோகிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாக செய்தி வெளியாகி இருந்தது
இந்நிலையில் உணவு ஆஃப்கள் மூலம் மது விற்பனை செய்யவிருப்பதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல் டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது