TamilNadu News
local holiday நவம்பர் 24 ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
local holiday news திருவாரூர் மாவட்டத்துக்கு நவம்பர் 24 ம் தேதி உள்ளூர் விடுமுறை
local holiday
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு நவ.24ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

முத்துபேட்டையில் அமைந்துள்ள செய்குதாவுது ஒலியுல்லாஹ் ஆண்டவரின் 722 ஆவது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் சந்தனக்கூடு நிகழ்ச்சி வரும் 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது .

இந்த நிகழ்வை காண வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வர். இதனை முன்னிட்டு வரும் நவ.24ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
