Madurai Jallikattu places dates 2024 மதுரையில் ஜல்லிகட்டு நடைபெறும் தேதிகள் இடங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ
Jallikattu Festival 2024

Madurai Jallikattu places dates 2024 மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் வருகிற 15-ஆம் தேதியும், பாலமேட்டில் 16-ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளார்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். பொங்கல் திருநாளான ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். இதற்காக விழாக்குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
16ஆம் தேதி பாலமேடு மஞ்சமலை ஆற்று திடல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக அங்கு வாடிவாசல் அமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
17ஆம் தேதியன்று உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோட்டை முனியாண்டி திடலில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதியின் பெயரை குறிப்பிடக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்க கூடாது எனவும் உத்தரவிட்ட ஐகோர்ட்டு, தீண்டாமை உறுதி மொழி எடுப்பது குறித்து மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.