maharaja movie review tamil விஜய் சேதுபதியின் மகாராஜா திரை விமர்சனம்
maharaja movie review tamil விஜய் சேதுபதியின் மகாராஜா திரை விமர்சனம்
நடிகர்கள்:-
விஜய் சேதுபதி
அனுராக் காஷ்யப்
நட்ராஜ் (நட்டி),
முனிஷ்காந்த்,
சிங்கம் புலி,
அபிராமி
மம்தா மோகன்தாஸ்,
வினோத் சாகர்
மற்றும் பலர்.
இசை:-
அஜனீஷ் லோக்நாத்,
இயக்கம்:-
நித்திலன் சுவாமிநாதன்
கதை:-
சென்னையில் முடி திருத்தும் நிலையம் ஒன்றை நடத்தி வரும் மகாராஜா (விஜய் சேதுபதி) தன்னுடைய வீட்டில் பாதுகாத்து வைத்திருக்கும் லஷ்மி என பெயரிடப்பட்டிருக்கும் பொருள் ஒன்றைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.
மகாராஜா தான் தொலைத்த அந்தப் பொருளைப் பற்றிச் சொல்கிறார்.அதைக்கேட்டு மொத்த காவல்நிலையமுமே கோபமடைகிறது. ஏன் என்றால் லஷ்மி என்பது குப்பைத் தொட்டி ஆகும்
மேலும் குப்பை தொட்டியை கண்டுபிடித்துக்கொடுத்தால் ரூ.5 லட்சம் தருவதாகக் கூறுகிறார். ஐநூறு ரூபாய் விலைகூட இல்லாத திருடுபோன பொருளை இவ்வளவு தொகை கொடுத்து மீட்க இவன் ஏன் போராடுகிறான் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.
திருடுபோன பொருளுக்குள் வேறு ஏதோ இருக்கிறது என காவல்துறை அப்பொருளை மீட்க தீவிரம் காட்டுகின்றனர். சாதாரண பொருளுக்காக ஏன் மகாராஜா இவ்வளவு மெனக்கெட வேண்டும்? குப்பைத் தொட்டிக்கும் மகாராஜாவிற்க்கும் உள்ள உறவு என்ன?
கொலை, கொள்ளைகளைச் செய்து வரும் செல்வம் (அனுராக் காஷ்யப்) ஒரு நாள் போலீஸிடம் சிக்கிக்கொள்ள தன்னை சிக்க வைத்தது சவர தொழிலாளி மகாராஜா (விஜய் சேதுபதி) தான் என்று தவறாக புரிந்துகொள்ளும் செல்வம், சிறை சென்று பதினைந்து ஆண்டுகள் கழித்து வந்து மகாராஜாவை கொலை செய்ய நினைக்கிறார்.
இந்த முயற்சியின்போது எதிர்பாராதவிதமாக மகாராஜாவின் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார். தன் மகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தீர்த்துக் கட்ட முயற்சிக்கிறார் மகாராஜா.
maharaja movie review tamil
டிரைலர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்