man wears burqa to see his girl friend காதலியை பார்க்க பர்தா அணிந்து சென்ற நபர் வசமாக சிக்கிய வைரல் வீடியோ

காதலியை பார்க்க பர்தா அணிந்து சென்ற நபர் வசமாக சிக்கிய வைரல் வீடியோ
உத்தர பிரதேச மாநிலம் அக்பர்பூர் கிராமத்தை சேர்ந்த சந்து என்கிற இளைஞர் (burqa) பர்தா அணிந்து கொண்டு தனது காதலியை சந்திக்க சென்றுள்ளார் இவர் நடந்து சென்றதைப் பார்த்த சிலர் இவர் மீது சந்தேக பட்டு பின்தொடர்ந்துள்ளனர்

பின் வழிமறித்து விசாரணை செய்து முகத்தை காட்ட வற்புறுத்தினர் மேலும் அந்த இளைஞர் மறுக்கவே வலுக்கட்டாயமாக அவரது முகத்தில் உள்ள திரையை விளக்கச் செய்து பார்த்தபோது அவர் ஒரு ஆண் என்பது தெரியவந்துள்ளது.
அவர் குழந்தைகளை கடத்த வந்திருக்கலாம் என்று நினைத்து அவரது ஆதார் அட்டையை கேட்டுள்ளனர் ஆனால் தன்னிடம் ஆதார் அட்டை இல்லை எனக் கூறியதால் அவரை அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸிடம் தனது காதலியை சந்திக்க மாறுவேடத்தில் சென்றதாக ஒப்புக்கொண்ட அந்த இளைஞரை சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.