melmaruvathur bangaru adigalar மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்!
bangaru adigalar died மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். இவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலை ஆதிபராசக்தி கோயில் என்றும் இந்த கோயிலின் கருவறைக்கு பெண்கள் செல்லவும், வழிபடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கூட இங்குள்ள கருவறைக்கு சென்று வழிபட செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்ரூ பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார்.நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
,மேலும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் , மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவு செய்தி அறிந்து வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டுக்கும் மேல் மிகச்சிறப்பாக நடத்தி கல்வி மருத்துவ சேவைகளை வழங்கியவர்.ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்தும் புரட்சிகரமான நடைமுறையை வழக்கப்படுத்தினார். பங்காரு அடியாளரின் ஆன்மீக புரட்சி மிகவும் மதித்து போற்றத்தக்கது. பிங்காரு அடிகளாரை இழந்து வாடும் குடும்பத்தினர், பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த பங்காரு அடிகளார் சேவையை போற்றும் வகையில் அரசு மரியாதை உடன் நாளை இறுதி சடங்கு நடக்கும் என தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன்.கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், ஏழை, எளிய மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கிய பங்காரு அடிகளார் அவர்களது மறைவு, நமது சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரின் ஆன்மீக அன்பர்களுக்கும் பக்தர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையின் அவதாரமாக நம்மிடையே வாழ்ந்து முக்தியடந்த அவரது பிரிவைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் அம்மன் வழங்கட்டும் ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவரும், பக்தர்களால் அன்போடு ‘அம்மா’ என்றழைக்கப்பட்டவரும், ஆதி பராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி கருவறை வரை சென்று பெண்கள் பூஜை செய்யவும், வழிபடவும் அனுமதித்து மிகப் பெரிய ஆன்மீக புரட்சி செய்தவர் திரு. பங்காரு அடிகளார் அவர்கள். உலக அளவில் சக்தி வழிபாட்டுத் தலங்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. ஆன்மீக பணிகளோடு, பல சமூக நலப் பணிகளையும் சிறப்பாக ஆற்றிய பெருமைக்குரியவர் பங்காரு அடிகளார் அவர்கள். இவரது ஆன்மீகச் சேவையை பாராட்டி மத்திய அரசு ‘பத்ம ஸ்ரீ’ விருதினை இவருக்கு வழங்கியது. இந்திய நாடு ஒரு மிகச் சிறந்த ஆன்மீகவாதியை இழந்துவிட்டது.இவருடைய இழப்பு இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஆகும்.
இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. திரு. பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட நிர்வாகிகளுக்கும், பக்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என குறிப்பிட்டுள்ளார்