TamilNadu News
nombu kanji chennai நோன்பு கஞ்சி குடிக்கும் போது பல்செட்டையும் சேர்த்து விழுங்கிய 92 வயது மூதாட்டி முழு விவரம்
nombu kanji chennai சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரஷியா பேகம் என்ற 92 வயது மூதாட்டி கடந்த புதன்கிழமை மாலை ரம்ஜான் நோன்பை முடித்துவிட்டு நோன்பு கஞ்சி குடித்தார். அப்போது அவர் அணிந்திருந்த பலசெட் நோன்பு கஞ்சியுடன் உணவுக்குழாய்க்குள் சென்றுள்ளது. இதனால் கடும் வேதனை அடைந்த அம்மூதாட்டியை அவரது மகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
மருத்துவக் குழுவினர், பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதையடுத்து, மூதாட்டியின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த பல் செட்டை நவீன கருவி மூலம் டாக்டர்கள் கவனமாக அகற்றினர். சுமார் 4 மணி நேர டாக்டர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு மூதாட்டி குணமடைந்துள்ளார் மூதாட்டியின் குடும்பத்தினர் மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.