TamilNadu News

One Nation One Student ID மாணவர்களுக்கு அபார் கார்டு மத்திய அரசு அறிமுகம்

APAAR ID Card அபார் கார்டு என்றால் முழு விவரம்

APAAR ID Card அபார் கார்டு என்றால் முழு விவரம்

ஒரே நாடு, ஒரு மாணவர் ஐடி எனப்படும் தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேட்டை (APAAR Card) செயல்படுத்தத் தொடங்குமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

APAAR ID Card
APAAR ID Card

APAAR கார்டு என்றால் என்ன?

தானியங்கு நிரந்தர கல்விக் கணக்குப் பதிவு – APAAR, ‘ஒரே நாடு, ஒரு மாணவர் ஐடி’ என அழைக்கப்படுகிறது.இந்தப் பதிவேடு, ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட அடையாள எண்ணை வழங்கும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு மூலம் இந்தியா முழுக்க அறிமுகப்படுத்த உள்ளது. போலி சான்றிதழ் முறைகேட்டை தடுக்கவும்,மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் மத்திய அரசு “அபார் ஐடி” திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது நம்மில் பலருக்கும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஆதார் கார்டு போல தான் இந்த அபார் ஐடி.ஆதார் இந்திய குடிமகன்களின் அடையாளம் ஆகும். அபார் மாணவர்களுக்கு அடையாளம் ஆகும்.

இந்த அபார் அடையாள அட்டை வைத்து மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அவர்களின் கல்வி நிலை உள்ளிட்ட செயல்பாடுகளை மத்திய அரசால் கண்காணிக்க முடியும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும்.

போலி மதிப்பெண் சான்றிதழ் வைத்து உயர் கல்வியில் சேர்வது,அரசு மற்றும் தனியார் பணிகளில் சேர்வது போன்ற முறைகேடுகள் இந்த அபார் ஐடி மூலம் எளிதாக கண்டறிய முடியும் மாணவர்களின் மதிப்பெண்,கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல் அனைத்தும் அபார் ஐடியில் இணைக்கப்பட்டு விடும்.

இதனால் மாணவர்கள் பள்ளி,கல்லூரி மாறுதல் வேலைக்கு செல்லுதல் உள்ளிட்ட இடங்களில் அபார் ஐடி காண்பித்தாலே போதும் அவர்களின் முழு விவரங்களையும் நிறுவனங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியம். ஆதார் கார்டு போலவே அபார் கார்டிலும் 12 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு,ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட வரிசையில் தற்பொழுது ஒரே நாடு ஒரே மாணவன் திட்டம் அறிமுகமாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கும் உங்கள் அபார் ஜடி கார்டு உருவாக்க இந்த லின்ங்கை கிளிக் செய்யவும்:-

Related Articles

Back to top button