orange alert in tamilnadu டிசம்பர் 2 & 3 தேதிகளில் சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
IMD Issues Orange Alert அடுத்த 6 நாட்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
orange alert in tamilnadu தமிழகத்தில் டிசம்பர் 2, மற்றும் 3-ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது
இது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:=
நேற்று (28-11-2023) காலை 0830 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (29-11-2023) காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-11-2023 வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 02-12-2023 வாக்கில் புயலாக வலுப்பெற கூடும்.
வடஇலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
29.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
03.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
04.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
05.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான
வானிலை முன்னறிவிப்பு:-
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்பொழுது இடி மின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும். வெப்பநிலை 24-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
orange alert in tamilnadu
https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf
மஞ்சள் அலர்ட் (Yellow Alert) :-
வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும் மேலும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தமாகும்
ஆரஞ்சு அலர்ட் (Amber Alert) orange alert :-
ஆம்பர் அலர்ட் என்பதுதான் சரியான பெயர். அது ஆரஞ்சு நிறம் போல இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் என்று புரிதலுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது ஆம்பர் அலர்ட் என்றால் வானிலை நிலைமை மோசமாக உள்ளது, எனவே உரிய பாதுகாப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்றும் அர்த்தம். பொருட்சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையைத் தரும். இது போன்ற நேரங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது நலம்.
ரெட் அலர்ட் (Red Alert) :-
அபாயத்தை உணர்த்தும் குறியீடு இது, சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு விட்டால் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் பகுதிகளில் உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அர்த்தம். மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போதே இந்த எச்சரிக்கை அளிக்கப்படும் இங்கு மரங்கள் முறிந்து விழும், மின்கம்பங்கள் வேரோடு சாயும். போக்குவரத்து, மின்சாரம், என எல்லாமே துண்டிக்கப்படும். பொதுமக்கள் எந்நேரமும் விழிப்புணர்வுடனேயே இருக்கவேண்டும்.