palani murugan temple news இந்துக்கள் அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குள் நுழையத் தடை..! மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
palani murugan temple news இந்து அல்லாதோர் பழனி முருகன் கோவில் கொடிமரம் தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும், அதனையும் மீறி மாற்று மதத்தினர் கோவிலுக்குள் வர விரும்பினால் அதற்கான தனி வருகை பதிவேடு வைத்து அதில், முருகன் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உறுதிமொழி கையெழுத்திட்ட பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படலாம் என கட்டுப்பாடுகளை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டுள்ளார்.
பழனி கோயிலில் இந்து அல்லாதவர்களுக்கு கட்டுப்பாடு
• பழனி கோயிலில் இந்து அல்லாதவர்களை கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது
• மத நம்பிக்கை அல்லாதவர்களையும் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது
• இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க உத்தரவு.
• கடவுள் மீது நம்பிக்கை உண்டு என்ற உறுதிமொழியை எழுதி வாங்கிய பின் மாற்று மதத்தை சார்ந்தவர்களை அனுமதிக்கலாம்
• இந்து அறநிலையத்துறை ஆணையர் கோவிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். பழனி கோவிலில் இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க கோரிய வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு
palani murugan temple news
More Details CLICK HERE