palani pathayathirai lottery பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையில் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு 1 கோடி பரிசு பெற்ற நபர்
palani pathayathirai lottery மூணாறில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் காலையில் வாங்கிய லாட்டரிக்கு ரூ.ஒரு கோடி பரிசு விழுந்துள்ளது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம். 45 வயதாகும் இவர் மூனாரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பணி புரிந்து வருகின்றார் இவர் பழநி முருகனுக்கு மாலையிட்டு நேற்று முன்தினம் காலை மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து 245 பேர் கொண்ட குழுவுடன் பாதயாத்திரையாக பரமசிவமும் தனது இரு மகன்களோடு சென்றார்.

செல்லும் வழியில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்தவர் அங்கு லாட்டரி விற்றவரிடம் கேரள அரசின் பிப்டி, பிப்டி லாட்டரி டிக்கெட் வாங்கினார்.தொடர்ந்து அவர் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் கோவில் அருகே பரமசிவமின் பாத யாத்திரை வந்த நிலையில், அவர் வாங்கிய லாட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்திருக்கும் தகவல் கிடைத்தது. இதனால் பரமசிவம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.பரமசிவத்திற்கு சொந்தமாக வீடு இல்லை. பரிசு தொகையில் வீடு கட்ட வேண்டும் என்பது அவரது ஆசை.கோவிலுக்கு பாத யாத்திரையாக வரும் வழியில் வாங்கிய லாட்டரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்ததால் பரமசிவம் எல்லையில்லா ஆனந்தம் அடைந்துள்ளார்.