paper collecting person got job காகிதம் எடுத்து பிழைப்பு நடத்தியவருக்கு கிடைத்த அதிஷ்டம் முழு விவரம்
அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் கொடுத்த அதிரடி சப்ரைஸ்
காகிதம் எடுத்து பிழைப்பு நடத்தியவருக்கு கிடைத்த அதிஷ்டம் முழு விவரம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் நெற்று (ஜுலை 22) காலை சென்னை கிண்டியில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தப்போது தெருவில் காகிதம் எடுப்பவர் அமைச்சரை பார்த்து வணக்கம் கூறினார். உடனெ அமைச்சர் அவரை அழைத்து விசாரரித்துள்ளார்.
விசாரரித்ததில் அவர் திருச்சியை சேர்ந்த ராஜா என்றும் அவர் தினமும் வீதில் காகிதங்களை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து உணவு உண்டு, சாலை ஓரம் உறங்கி வந்ததும் அமைச்சருக்கு தெரியவந்தது.

உடனே அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் அவர்கள் ராஜாவை தன் வாகனத்திலேயே வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை குளித்து உடை மாற்றும் படி கூறி உணவு வழங்கியுள்ளார்
பின் ராஜாவை கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அமைச்சர், ராஜாவுக்கு சில மருத்துவ பரிசோதனை செய்த பின் தற்காலிக அடிப்படையில் ரூ 12,000 மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
paper collecting person got job