PART TIME DIPLOMA IN COOPERATIVE MANAGEMENT அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்பு படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
diploma in cooperative management admission 2023 கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்பு
2023-2024 ஆம் ஆண்டு 23 வதுஅஞ்சல்வழி / பகுதிநேர (மாறுதலுக்கு உட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக சென்னை மாவட்டத்தில் செயல்படும் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-2024 ஆம் ஆண்டு 23 வது அஞ்சல் வழி / பகுதிநேர (மாற்றத்திற்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (புதிய பாடத்திட்டத்தின்படி) விரைவில் துவங்கப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் உத்தேசமாக 10.11.2023 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ. 100/-ஐ இணைய வழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று +2 தேர்ச்சி பெற்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி தொடர்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.comஎன்ற இணையதளத்தில் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், அந்தந்த மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களை அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க:-
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள:-
+2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். 01.08.2023 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
இப்பயிற்சிக்கு அதிகாரபூர்வ இணையதளமான www.tncukcm.com மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.100/-ஐ அரசுடமையாக்கப்பட்ட / கூட்டுறவு வங்கிகள் மூலம் (TNSC Bank, Chetput branch Chennai -10 SB A/c No.210008171, IFSC Code TNSC0000001 என்ற கணக்கில் செலுத்திவிட்டு அதற்கான Challan-ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தில் உள்ள QR Code மூலம் Scan செய்தும் செலுத்தலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில் தனிதனியே ரூ.100/- விண்ணப்ப கட்டணம் வங்கியில் செலுத்திவிட்டு அதற்கான Challan-ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தில் உள்ள QR Code மூலம் Scan செய்தும் செலுத்தலாம். பதிவேற்றம் செய்த Challan நகல் மற்றும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து (Application Printout copy) அதில் சுய ஒப்பமிட்டு (Self Attested) சம்மந்தப்பட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அல்லது பதிவு அஞ்சலில் ஒப்புகையுடன் (Register Post with Acknowledgement) அல்லது Courier மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இணையவழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இணையவழியாக அல்லாமல் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ மட்டும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பித்திருந்தால், அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.