pink squad in metro train சென்னை மெட்ரோ ரயிலில் 23 பெண் பாதுகாவலர்கள் அடங்கிய பிங்க் ஸ்குவாட்
Pink Squad in metro train மெட்ரோ ரயிலில் 23 பெண் பாதுகாவலர்கள் அடங்கிய பிங்க் ஸ்குவாட் பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்புக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிதாக நடவடிக்கையை எடுத்துள்ளது அதன்படி பெண் பாதுகாவலாளர்கள் அடங்கிய ‘பிங்க் ஸ்குவாட்’ (Pink Squad) என்ற குழுவைத் தொடங்கியுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் அவர்கள் பாதுகாப்பு தொடர்பாக விவரங்கள் கேட்கப்பட்ட போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை வேண்டும் என்றும் ,கூட்ட நெரிசல் நேரங்களில் பெண்களுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் மெட்ரோ ரயிலில் இருக்கக்கூடிய பொது பெட்டிகளைத் தவிர்த்து சில ஆண்கள், மகளிர் பெட்டிகளில் பயணம் செய்வதாகவும் புகார்கள் வந்துள்ளன.
இதனை தொடர்ந்து 23 பெண் பாதுகாவலர்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களுக்கு எதிராக நிகழக்கூடிய ஈவ் டீசிங் போன்ற குற்றங்களைத் தவிர்ப்பதற்காக இந்தக் குழுவை நியமித்துள்ளதாகவும்,அதிக கூட்ட நெரிசல் ஏற்படக்கூடிய ரயில் நிலையங்களான புரட்சித்தலைவர் டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் சென்னை விமான நிலையம் மெட்ரோ ஆகியவற்றில் இவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பிரத்யேக தொடர்பு எண்: 1860 425 1515
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கக்கூடிய பெண்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் (Pink Squad)பிங்க் ஸ்குவாடை தொடர்புகொள்ளலாம். தற்காலிகமாக CMRL உதவி எண்ணை (1860 425 1515) தொடர்பு கொள்ளலாம்.
கூடிய விரைவில் BSNL நிறுவனத்துடன் இணைந்து மகளிர் உதவிக்காக பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார் மேலும் இந்த Pink Squadல் உள்ள 23 பெண் பாதுகாவலர்களும் தற்காப்பு கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தவிர, வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றிலும் நன்கு பயிற்சி பெற்றுள்ளனர். பாதுகாப்பான சூழலை உருவாக்கி பெண் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்” என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு. அ. சித்திக் குறியுள்ளார்.
pink squad in metro train
For information