TamilNadu NewsIMPORTANT NEWS

post office insurance scheme 555 ரூபாய்க்கு 10 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு முழு விவரம்

Get Rs 10 lakh insurance policy at Rs 555 premium இந்திய தபால் துறையின் இன்சூரன்ஸ் திட்டங்கள்

post office insurance scheme  இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் அஞ்சலகங்களில் ஆண்டிற்கு வெறும் ரூ.520/ ரூ.555/ ரூ.755-ல் ரூ.10 லட்சம்/ ரூ.15 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான் அறிவிப்பில்:-

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520/ ரூ.555/ ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம்/ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள் (தபால்காரர்/கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம், மிகக் குறைந்த பிரீமியத் தொகையுடன் கூடிய இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.

விண்ணப்பப் படிவம், அடையாள/முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகிதப் பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி, வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்தப் பாலிசி வழங்கப்படும்

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:-

ரூ.10 லட்சம்/ 15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு/நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம்)

ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி

தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி

விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை)

விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை

விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை

விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.1000/- வீதம் 15 நாட்களுக்கு ( 2 நாட்கள் கழிக்கப்படும்)

விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5000 வரை.

ஆண்டிற்கு வெறும் ரூ.555-ல்/ரூ.755-ல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்துக் காப்பீட்டுப் பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும்/ நிதி நெருக்கடிகளையும்/ உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள்/தபால்காரர்கள் மூலம் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெற தபால் துறை கேட்டுக்கொண்டுள்ளது

post office insurance scheme
post office insurance scheme

post office insurance scheme

More Details Click Here

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2033379

Related Articles

Back to top button