pregnant lady dies after dupatta stuck in bike wheel விடிந்தால் சீமந்தம் மோட்டார் பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி கர்ப்பிணி உயிரிழந்தார்

விடிந்தால் சீமந்தம் மோட்டார் பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி கர்ப்பிணி உயிரிழந்தார்
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த தனுஷ்(21) என்பவர், அப்பகுதுயில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார.இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த காவியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்துள்ளது. தற்போது காவியா 7 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் திருமணத்திர்க்கு பிறகு ஒருமுறை கூட காவ்யாவின் பெற்றோர் சேலத்தில் உள்ள மகளின் வீட்டிற்கு வரவில்லை எனவே தனது சீமந்தத்திற்கு அவசியம் வர வேண்டும் என்று காவ்யா கூறியிருக்கிறார்
சேலத்தில் புதன் அன்று காவியாவுக்கு சீமந்தம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கர்ப்பினி மகளின் ஆசைபடி வளைகாப்பிற்கு பழனியில் இருந்து காவியாவின் தாயும், தந்தையும் கடந்த செவ்வாய் இரவு சேலத்திற்கு வந்தனர்.
இருவரும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கி மகளுக்கு போன் செய்து சேலத்திற்கு வந்துவிட்டதாக கூறியுள்ளனர் . காவியாவின் திருமணத்திர்க்கு பிறகு அவரது பெற்றோர் முதல் முறையாக சேலம் வந்துள்ளார்கள் என்பதால், தானே நேரில் சென்று தனது பெற்றோரை அழைத்து வரவேண்டும் என்ற விரும்பிய காவியா தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்
நள்ளிரவு சுமார் 12 மணியளவில் புதிய பேருந்து நிலையம் நோக்கி சென்றபோது, சாரதா கல்லூரி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இறங்கும் இடத்தில் மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் காவியாவின் துப்பட்டா, சிக்கியதில் காவியா கீழே விழுந்துள்ளார்
இதில் காவியாவின் பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த காவியா சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை உயிரிழந்தார் .
மகளின் சீமந்தத்திற்கு வந்த பெற்றோர் அவரது இறுதி சடங்கில் பங்கேற்கும் நிலைமை ஆகிவிட்டதே என்று அவர்கள் கதறி அழுதது காண்போரையும் கலங்க வைத்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
pregnant lady dies after dupatta stuck in bike wheel
ஓடும் இரயிலில் ஏற முயன்ற மாணவி தவறி விழுந்து உயிர் தப்பிய பகீர் வீடியோ