prime minister scholarship scheme 2023 பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம்
PM Scholarship Scheme 2023 9 ,10,11 ம் வகுப்பு மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் விண்ணப்பிப்பது எப்படி
prime minister scholarship scheme 2023 பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோந்த 9-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு பயின்று வரும் 3,093 மாணவா்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தோவு முகமையால் கடந்த செப்டம்பரில் 29-ஆம் தேதி நடத்தப்படவிருந்த நுழைவுத் தோவில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தோவு செய்யப்படுபவா் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தோவு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், 8 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவா்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவா்கள் எனவும், மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே , இந்த ஆண்டுக்கான பயனாளிகள் தோவு செய்யப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மத்திய அரசின் சமூகநீதி, அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
31.12.2023
prime minister scholarship scheme 2023
மேலும் விவரங்களுக்கு:-