TamilNadu News

RTE Admission 2024-25 Tamilnadu Online தனியார் பள்ளியில் RTE இலவசமாக படிக்க விண்ணப்பிக்கலாம்

RTE Admission 2024-25 Tamilnadu Online 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் இலவசமாக படிக்க அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டம் சட்டத்திருத்தம் 2009இன் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதில், பயிலும் மாணவர்களுக்கு அரசே கல்வி செலவை ஏற்கும். இதற்கு மாணவரின் புகைப்படம், ஆதார், சாதி சான்று, பெற்றோர்களின் அடையாள ஆவணங்கள், வருமான சான்று உள்ளிட்டவை கொண்டு இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். 2024- 2025 கல்வியாண்டில் புதியதாக எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

RTE Admission 2024-25 Tamilnadu Online
RTE Admission 2024-25 Tamilnadu Online

அதன்படி , ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 18ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தபட்டுள்ளது.

RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு வரும் ஏப்ரல் 20 ம் தேதி முதல் மே மாதம் 20 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சுமார் 25% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமே கட்டாய கல்வி உரிமை சட்டமாகும்

இந்த சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை இச்சட்டத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கலாம். இச்சட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புவோர்கள் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். ஒவ்வொரு பள்ளிகளிலும் 25% ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை என்பது கட்டாயமானது. இதற்கான கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

குழந்தையின் புகைப்படம்.

குழந்தையின் ஆதார் அட்டை

குழந்தையின் சாதி சான்றிதழ்

தந்தையின் வருமான சான்றிதழ்.

பெற்றோர்களின் ஆதார் அட்டை.

குடும்ப அட்டை

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 20.05.2023

RTE விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் பள்ளிக்கல்வித் துறையின் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அடுத்து வரும் பக்கத்தில் Start Application என்பதை கிளிக் செய்யவும். அதன்பின்பு விண்ணப்பத்தில் மாணவரின் விவரங்கள், பெற்றோர் விவரங்கள், முகவரி, என அனைத்தையும் பதிவு செய்யுங்கள் அடுத்து உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள நீங்கள் சேர்க்க விரும்பும் தனியார் பள்ளியைத் தேர்வு செய்ய வேண்டும். பள்ளியைத் தேர்வு செய்து விண்ணப்பத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு சமர்ப்பி என்பதை அழுத்தவும். அடுத்து உங்கள் தொலைப்பேசிக்கு ஒரு பதிவு எண் குறுந்தகவல் மூலம் அவ்வளவுதான் 

RTE Admission 2024-25 Tamilnadu Online

More Details Click Here

Related Articles

Back to top button