sabarimala special trains 2023 சபரிமலைக்கு செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முழு விவரம்
Sabarimala Season Special Trains சபரிமலைக்கு செல்ல சிறப்பு ரயில்கள் அட்டவணை இதோ
sabarimala special trains 2023
Sabarimala Season Special Trains கேரளமாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளது இங்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பலரும் வந்து செல்வர் அதற்க்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றது, அதேபோல் ரயில்வே துறையும் சிறப்பு ரயில்களையும் அறிவித்துள்ளது, அதன்படி
கேரளாவில் இருந்து தெலுங்கானா செல்லும் ரயில்:-
கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் காக்கிநாடா டவுனிற்க்கு நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 02 ஆகிய தேதிகளில் மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 4:00 மணி காக்கிநாடா டவுன் ரயில் நிலையத்தை சென்றடையும்.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்க்கு நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 02 ஆகிய தேதிகளில் கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 4:30 மணிக்கு செகந்திரபாத் ரயில் நிலையத்தை சென்றடையும்.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செகந்திராபாத்திற்க்கு செல்ல நவம்பர் 28 மற்றும் டிசம்பர் 5ஆம் தேதிகளில் அதிகாலை 2:30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 8:55 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்தை சென்றடையும்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் நர்சாபூருக்கு நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 04 ஆகிய தேதிகளில் இரவு 7:00 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் இரவு 9:00 மணிக்கு நர்சாபூர் ரயில் நிலையத்தை சென்றடையும்.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சேகுடாவிற்க்கு நவம்பர் 24 , டிசம்பர் 01 மற்றும் 08 ஆகிய தேதிகளில் அதிகாலை 2:30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 10:30 மணிக்கு கச்சேகுடா ரயில் நிலையத்தை சென்றடையும்.
தெலுங்கானாவில் இருந்து கேரளாவிற்க்கு செல்லும் ரயில்:-
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து கேரளமாநிலம் கொல்லத்திற்க்கு நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 3ஆம் தேதிகளில் மாலை 4:30 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் இரவு 11:55 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
தெலுங்கானா மாநிலம் நர்சாபூரில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்க்கு நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் மாலை 3:50 மணிக்கு நர்சாபூரில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் மாலை 4:50 மணிக்கும் கோட்டயம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்க்கு நவம்பர் 22, 29 மற்றும் டிசம்பர் 06 ஆகிய தேதிகளில் மாலை 5:30 மணிக்கு கச்சேகுடா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் இரவு 11:55 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
தெலுங்கானா மாநிலம் காக்கிநாடா டவுனில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்க்கு நவம்பர் 23 மற்றும் 30 தேதிகளில் காக்கிநாடா டவுன் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5:40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 10:00 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்க்கு நவம்பர் 24 மற்றும் டிசம்பர் 01 ஆகிய தேதிகள் மாலை 3:00 மணிக்கு செகந்திரபாத் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் இரவு 7:30 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
சென்னையில் இருந்து கேரளாவிற்க்கு செல்லும் சிறப்பு ரயில்
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து -கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்: 06027/06028) இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து கேரளா கோட்டயத்திற்க்கு நவம்பர் மாதம் 19 மற்றும் 26 தேதிகளிலும் டிசம்பர் மாதத்தில் 3,10, 17, 24, 31 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
மறுமார்க்கமாக கோட்டயம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06028) வாரந்தோறும் திங்கட்கிழமை மட்டும் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் கோட்டயம் ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் 20, 27 ம் தேதி டிசம்பர் மாதம் 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி மாதம் 1ம் தேதி வரை திங்கட்கிழமை தோறும் கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.