TamilNadu News

sabarimala ticket online booking சபரிமலை செல்ல ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி முழு விவரம்

சபரிமலை செல்ல ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி முழு விவரம் 

சபரிமலை 2024 – 25 மண்டல, மகர விளக்கு கால சீசன் தரிசனத்துக்கான முன்பதிவு துவங்கியது. சபரிமலை ஆன்லைன் புக்கிங் இணையதளத்தில் விபரங்களை பதிவேற்றம் செய்து, ‘போட்டோ அப்லோடு’ செய்து முன்பதிவு செய்யலாம்.

sabarimala ticket online booking
sabarimala ticket online booking

முன்பதிவு செய்வது எப்படி:

சபரிமலை அதிகாரபூர்வ இணையதளத்திற்க்கு https://sabarimalaonline.org/#/login சென்று Sign Up பகுதியில் மொபைல் எண் , இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் கொடுத்து கேப்சாவை. உள்ளிட்டு Register பட்டனை அழுத்துங்கள். அடுத்து உங்கள் இமெயில் முகவரிக்கு ஆக்டிவேசன் லின்க் மற்றும் ஆக்டிவேசன் கோட்அனுப்பி வைக்கப்படும்.

அந்த லின்க் ஐ க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள். அடுத்து இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் லாக் இன் செய்யுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் பெயர், முகவரி, நகரம், பின்கோடு, மொபைல் எண், நாடு, மாநிலம், மாவட்டம், பாலினம், வயது, போட்டோ அடையாள வகை, போட்டோ அடையாள எண். மொழி, தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.

அடுத்து நீங்கள் Search Availability என்ற பகுதியில் தங்களுடன் எத்தனை நபர்கள் தரிசிக்க உள்ளனர் என்ற விவரத்தையும் எந்த மாதத்தில் எந்த தேதியில் தரிசிக்க உள்ளீர் என்பதை செலக்ட் செய்து Search பட்டனை அழுத்துங்கள். நீங்கள் தேதியை தேர்ந்தெடுத்தவுடன் அந்த தேதியில் உள்ள தரிசன நேரததை காண்பிக்கும்.

உங்களுக்கு தேவையான நேரத்தை தேரந்தெடுத்து அதன் அருகில் உள்ள Book Now பட்டனை அழுத்துங்கள், அடுத்தாக தற்போது கேப்சாவை உள்ளிட்டு Confim My Bboking பட்டனை அழுத்துங்கள். அவ்வளவுதான் உங்கள் தரிசன டிக்கெட் தயார்

அதிகாரப்பூர்வ இணைய தளம் செல்ல:

CLICK HERE

sabarimala ticket online booking

Related Articles

Back to top button