saidai duraisamy son accident சட்லஜ் ஆற்றில் கிடைத்த உடல் பாகங்கள்..டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி வைப்பு
saidai duraisamy son accident சட்லஜ் ஆற்றில் கிடைத்த உடல் பாகங்கள்..டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி வைப்பு
ஆற்றில் கவிழ்ந்து விபத்து மாயமான மகன் குறித்து தகவல் கொடுத்தால் 1 கோடி சன்மானம்..! சைதை துரைசாமி அறிவிப்பு சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தின் காசங் நாலா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இன்னோவா கார் ஆனது கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துகுள்ளானது இதில் வெற்றி துரைசாமி காரின் பின் இருக்கையிலும் அவரது நண்பர் முன் இருக்கையிலும் அமர்ந்துள்ளனர். நண்பர் மற்றும் ஒட்டுநர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் விபத்தின் போது காருடன் நதியில் விழுந்துள்ளார்கள் வெற்றி துரைசாமி பின் இருக்கையில் அமர்ந்து சென்றதால் விபத்து ஏற்பட்டு கார் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. அப்போது கார் கதவு திறந்தால் வெற்றி தூக்கி வீசப்பட்ட நிலையில் விழுந்துளார்.
இதில் கார் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் மேலும் வெற்றி துரைசாமியின் நண்பர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார், இந்த விபத்தில் அதில் உடன் இருந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை எனவும் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக தகவல்கள் வெளியானது
மேலும் ஹிமாச்சலில் கடும் பனிப்பொழிவு காரணமாக தேடும் பணியில் சிக்கல் நிலவுகிறது.இந்நிலையில் சட்லஜ் நதியில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். அதேபோல் ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட தகவலை அருகில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தெரிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.சைதை துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு விரைந்துள்ளார்.
இந்நிலையில் காணாமல் போன முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியைத் தேடி மீட்பு குழுவினர் ஈடுபட்டு வந்த நிலையில், சட்லஜ் நதி ஓரத்தில், மனித மூளை உள்ளிட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சட்லஜ் ஆற்றில் மனித உடல் பாகங்கள் காணாமல் போன வெற்றியின் உடல் பாகங்களா என டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது