school turned into swimming pool கோடை வெப்பத்தை தணிக்க வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றிய பள்ளி நிர்வாகம்
school turned into swimming pool கோடை வெப்பத்தை தணிக்க வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றிய பள்ளி நிர்வாகம்
பெரும்பாலான பள்ளிகள் தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டடுள்ளது அனால் , உத்திர பிரதேச் மாநிலம், கன்னாஜ் மாவட்டம் மக்சௌனாபூர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் இறுதித் தேர்வை முடிக்காத நிலையில், வெயிலின் தாக்கம் அதிகாமாக உள்ளதால் பள்ளிக்கு வரும் குழந்தைகள் மிகவும் அவதிக்கு உள்ளாவதை உணர்ந்த பள்ளி நிர்வாகம்,
வகுப்பறை வெப்பத்தை தணிக்கும் வகையில் வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றப்பட்டுள்ளது.வகுப்பறை தரையை சுற்றி 2 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு அதில் குழந்தைகள் நீந்தி விளையாட, 1அடி உயரத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
பயிர் அறுவடை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக பள்ளிக்கு வர மறுத்த குழந்தைகள் தற்போது நீச்சல் குளத்தில் ஆட்டம் போட பள்ளிக்கு அதிகளவில் வருகின்றனர்
மேலும் இந்த தற்காலிக நீச்சல் குளத்தில் பள்ளி குழந்தைகள் வெயிலை சமாளிக்க விளையாடி வருகின்றனர். இதனால் வெப்பம் தணிந்து குழந்தைகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வகுப்பறை நீச்சல் குளத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதிக்கும் வீடியோவை பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்
வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்