TamilNadu News

star health home care treatment இல்லம் தேடி சிகிச்சை அறிமுகபடுத்திய ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்

star health home care treatment இல்லம் தேடி சிகிச்சை அறிமுகபடுத்திய ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்

இல்லம் தேடி மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் புதிய காப்பீட்டு வசதியை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அண்ட் அலைய்டு நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் ஆனந்த் ராய் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

star health home care treatment
star health home care treatment

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தைப் பொருத்தவரை, காப்பீடு முறையீட்டுக்கான விண்ணப்பம் கிடைக்கப் பெற்ற 2 மணி நேரத்துக்குள் நிதியை விடுவிக்கிறது. அதன்படி, நாடு முழுவதும் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட காப்பீட்டு முறையீடுகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு மொத்தம் ரூ.44,000 கோடி நிதி வாடிக்கையாளர்களின் மருத்துவச் செலவினங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய், ஆட்டிஸம், இதய பாதிப்புகள், சர்க்கரை நோய், உடல் பருமன் குறைப்பு சிகிச்சைகளுக்காக பிரத்யேக காப்பீட்டுத் திட்டங் களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக தற்போது இல்லம் தேடி சிகிச்சை (ஹோம் ஹெல்த் கேர்) திட்டம் தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்பட நாடு முழுவதும் 50 நகரங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் கீழ் அவசர சிகிச்சை அல்லாத பிற சிகிச்சைகள் தேவைப்ப டும் நோயாளிகளுக்கு வீட்டிலேயே எங்களது மருத்துவக் குழுவினர் நேரடியாக வந்து சிகிச்சை மேற்கொள்வார்கள். மருத்துவ பரிசோத னைகள், மருந்துகளும் வழங்குவர். தேவைப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்க பரிந்துரை செய்வார்கள். இதன் வாயிலாக முதியவர்கள், குழந்தைகள் பலன் பெறுவர். வீட்டிலேயே ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுவதன் மூலம் நோய் பாதிப்பு தீவிர மடைந்து மருத்துவமனையில் அனுமதியாவதைத் தவிர்க்க முடியும் என்றார் அவர்.

star health home care treatment

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.starhealth.in/

Related Articles

Back to top button