sudden flash flood in kutralam falls குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம் 17 வயது சிறுவன் பலி வைரல் வீடியோ

sudden flash flood in kutralam falls குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம் 17 வயது சிறுவன் பலி வைரல் வீடியோ
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்பு

பழைய குற்றால அருவியில் இன்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளத்தால் அருவியில் திடீரென நீர்வரத்து அதிகமாக இருந்ததால், சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதில் நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) தனது குடும்பத்தினருடன் பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் மாயமாகியுள்ளார். காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்துள்ளனர். குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அருவியில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் சிறுவன் அஸ்வினின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-