Tamil Nadu Half Yearly Exam Time Table 2023-24 அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை
Half Yearly Exam Time Table அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
Tamil Nadu Half Yearly Exam Time Table 2023-24 தமிழ்நாடு மாநில கல்வித்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள அரையாண்டு தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது.
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகின்றன.
11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.
6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு தேர்வு அட்டவணை விவரம்:-
நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது.
6ஆம் வகுப்பு முதல் 8 ம்வகுப்பு வரை காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும்
9, ஆம் வகுப்பு 10 வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4.30 வரையிலும் தேர்வு நடைபெறும்
11.12.2023 அன்று தமிழ்,(மொழிப்பாடம்) தேர்வு நடைபெறும்
12.12.2023 அன்று விருப்பட்ட மொழி பாடம் தேர்வு நடைபெறும்
13.12.2023 அன்று ஆங்கிலம் தேர்வு நடைபெறும்
15.12.2023 அன்று அறிவியல் தேர்வு நடைபெறும்
18.12.2023 அன்று கணிதம் தேர்வு நடைபெறும் 20.12.2023 அன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்
21.12.2023 அன்று உடற்கல்வி தேர்வு நடைபெறும்
11,12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:-
11, 12-ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கிறது.
12-வகுப்புக்கு காலை 09.30 மணியில் இருந்து மதியம் 12.45 வரை தேர்வு நடைபெறும் காலை 9.30 மணி முதல் 09.40 வரையிலான 10 நிமிடங்கள் வினாத் தாள்களை படிக்கவும்,
09.40 முதல் 09.45 வரையிலான 5 நிமிடங்கள், விடைத்தாளை பூர்த்தி செய்யவும்,
09.45 மணியில் இருந்து மதியம் 12.45 வரை தேர்வானது நடைபெறும்.
11ஆம் வகுப்புகளுக்கு மதியம் 01.15 முதல் மாலை 4.30 வரை தேர்வு நடைபெறும்.
7.12.2023 அன்று மொழி பாடம் தேர்வு நடைபெறும்
8.12.2023 அன்று ஆங்கிலம், தேர்வு நடைபெறும்
11.12.2023 அன்று கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது).தேர்வு நடைபெறும்
13.12.2023 அன்று ஆங்கில தொடர்புடையல், இந்திய கலச்சாரம் மற்றும் கொள்கைகள், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்படுத்தபட்ட மொழிப்பாடம் (தமிழ்), மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை மிண்ணணு பொறியியல்.தேர்வு நடைபெறும்
16.12.2023 அன்று இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள்தேர்வு நடைபெறும்
19.12.2023 வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல் தேர்வு நடைபெறும்
22.12.2023 அன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னனு பொறியியல் , அடிப்படை கட்டுமான பொறியியல், அடிப்படை வாகன பொறியியல், அடிப்படை இயந்திர பொறியியல், துணிநூல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகதண்மை ஆகிய தேர்வு நடைபெறும்
21 ம் தேதி தேர்வுகள் நிறைவுபெற்று பின் பள்ளிகள் மீண்டும் ஜனவரி 02, 2024 அன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது