TASMAC increases prices of liquor பிப்ரவரி 1 முதல் மதுபானங்களின் விலை உயர்வு டாஸ்மாக் அறிவிப்பு முழு விவரம்
TASMAC increases prices of liquor டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை விலை பிப்ரவரி முதல் உயர்கிறது
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

01.02.2024 முதல் மதுபானங்களின் விலை உயர்வு மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது.
180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது. 650
மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை 10 உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி.., 750 மி.லி., 1000 மி.லி மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி… 500 மி.லி .. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது
TASMAC increases prices of liquor
— TN DIPR (@TNDIPRNEWS) January 29, 2024