thieves returned the stolen awards இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய 2விருதுகளை திருப்பி வைத்த திருடர்கள்
மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிய திருடர்கள்

thieves returned the stolen awards இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய 2விருதுகளை திருப்பி வைத்த திருடர்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிய திருடர்கள்
காக்கா முட்டை, கடைசி விவசாயி பொன்ற படங்களை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரில் வசித்து வருகிறார். தற்போது பணி நிமித்தமாக கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி உசிலம்பட்டியிலுள்ள அவர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கும்பல் உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய், 5 பவுன் தங்க நகை மற்றும் கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய. நிலையில், உசிலம்பட்டி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மணிகண்டன் வீட்டின் கேட்டில் பாலித்தீன் பையில், திருடிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களுடன், ‘அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு.’ என்ற இரண்டு வரிகள் எழுதப்பட்ட துண்டு காகிதத்தையும் வைத்துவிட்டு சென்றுள்ளனர்

இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல்துறையினர் பாலித்தீன் பையில், திருடிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களுடன் எழுதப்பட்ட துண்டு காகிதத்தையும் கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடர்கள், விருதுக்கான பதக்கங்களை மட்டும் வைத்து கடிதம் எழுதிவிட்டு சென்றுள்ளது சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.