tirupati laddu pariharam 6 மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்றி இந்த மந்திரம் சொல்லுங்க தோஷம் போயிடும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
tirupati laddu pariharam 6 மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்றி இந்த மந்திரம் சொல்லுங்க தோஷம் போயிடும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு கூறியது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் அதற்கான ஆய்வறிக்கை இந்த குற்றச்சாட்டை உறுதி செய்வதாகவும், முதலமைச்சர் கூறியது உண்மைதான் என்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகி சியாமளா ராவ் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு பொய் என மறுத்துள்ள ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதையடுத்து ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தின் தெய்வீகத்தன்மையும், தூய்மையும் இப்போது கறைபடவில்லை எனவும், லட்டு பிரசாதத்தின் புனிதம் மீண்டும் மீட்கப்பட்டதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டை செய்வதற்காக பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதால் தோஷம் ஏற்பட்டுள்ளதாகவும் அதை நீங்குவதற்கு பக்தர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விலக்கு ஏற்ற வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் விளக்கு ஏற்றி
ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ வெங்கடேசாய என்ற மந்திரத்தை சொல்லவும் என வேண்டுகோள் விடுத்துள்ளது
Purificatory Shanti Homam Concludes Ritual Held to Ward Off Doshas and for the Benefit of Devotees –
Devotees Should Recite the Kshama Mantra in the Evening – Archakas