TamilNadu News

TN declares Nov 13 holiday தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமையும் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி தினமானது இந்த வருடம் ஞாயிற்று கிழமை (12.11.2023) வருவதால், வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் நலன் கருதி கூடுதல் நாள் விடுமுறை கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று தற்போது தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாள் 13.11.2023 திங்களன்று விடுமுறை நாள் என அறிவித்துள்ளது.

TN declares Nov 13 holiday
TN declares Nov 13 holiday

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு இவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை
தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை

Related Articles

Back to top button